சார்பட்டா படத்திற்கு FC Gold அங்கீகாரம்.!

Default Image

சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு “FC GOLD” என்ற விருது கிடைத்துள்ளது. 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடித்தவர்களின் அணைத்து கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றார்கள்.

இந்த நிலையில், Film Companion நிறுவனம் சார்பாக மிக சிறந்த படத்திற்கு வழங்கப்படும் “FC GOLD” என்ற விருது  சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இது முதல் விருது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்