FBI அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் வீடு, அலுவலகத்தில் சோதனை…!

Default Image

எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டிரம்பின் வழக்கறிஞரான மைக்கேல் கோஹனின் ((Michael Cohen)) வீடு, அலுவலகம், ஹோட்டல் அறையில் அதிரடி சோதனை நடத்தி கணினி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

டிரம்ப் அதிபராவதற்கு முன்னர் அவருடன் பணத்துக்காக ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற நீலப்பட நடிகை பாலியல் உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது.  அதுகுறித்து பகிரங்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அதிபர் தேர்தலுக்கு முன்னர் தமக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் தொகையை மைக்கேல் ஹோகன் வழங்கியதாக ஸ்டார்மி டேனியல்ஸ் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஹோகனின் வீடு, அலுவலகம் மற்றும் ஹோட்டல் அறையில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரது கணினி மற்றும் ஸ்டார்மி டேனியல்சுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.இது நியாயமற்றது என்றும், அவமதிப்பான சூழல் என்றும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்