குழந்தைகளுக்கு பிடித்த கடல்பாசி ஜெல்லி கேக் !!!!!!!!
புது விதமான கேக் ரெசிபி யை பார்ப்போம் .கேக் புடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க நிறைய பழங்களை பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான கேக் எப்படி செய்யலாம் ன்னு பார்க்கலாம் வாங்க .
தேவையான பொருட்கள் :
- ஆப்பிள் ஜூஸ்-50 மிலி
- ஆரஞ்சு ஜூஸ்-50 மிலி
- கொய்யா ஜூஸ்-50 மிலி
- மாதுளை ஜூஸ் -50 மிலி
- மாம்பழ ஜூஸ் -50 மிலி
- அகர் அகர்-10 கி
- சீனி -250கி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 400 மி லி தண்ணீரை கொதிக்க விட வேண்டும் 10 கி அகர் அகர் ரை எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் . கொதிக்க வைத்த தண்ணீரில் இந்த அகர் அக்கரை சேர்க்க வேண்டும்.அகர் அகர் நன்றாக கஞ்சி மாதிரி கரைய வேண்டும் .
மேலும் அதனுடன் சீனியை சேர்த்து கிளற வேண்டும் .இந்த கலவை நன்கு கொதித்தவுடன் அதை இறக்க வேண்டும் .இறக்கிய பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் அகர்அகர் கலவை சேர்த்து ஒரு அகலமான தட்டில் ஊற்ற வேண்டும் .இதே போல் அனைத்து ஜூஸ் களையும் தனித் தனியே எடுத்து அகரகர் கலவை சேர்த்து ஒரு அகலமான தட்டில் ஊற்ற வேண்டும்.இதை ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும் .
மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 400 மி லி பாலை எடுத்து சூடாக்கவும். பின்பு அதில் தேவையான அளவு சீனியை சேர்கக வேண்டும்.பால் நன்கு சூடானவுடன் அதை இறக்கி அதில் வெண்ணிலா எசன்ஸை சேர்க்க வேண்டும்.பின்பு பால் நன்கு ஆறியவுடன் அதை பிரிட்ஜ் ஜில் வைக்க வேண்டும்.
இப்போது ஏற்கனவே வைத்து இருந்த அகரகர் ஜெல்லி கலவையை சிறு சிறுத்துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து அதனுள் அனை த்து ஜெல்லி கலவைகளையும் போட்டு அதனுள் காய்ச்சிய பாலை ஊற்றி அந்த பாத்திரத்தை பிரிட்ஜ்குள் வைக்க வேண்டும்.இதனை ஆறு மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தால் சூப்பரான ஜெல்லி கேக் ரெடி .