மகிழ்ச்சியான செய்தி: கூகுள் பிளே ஸ்டோருக்கு வந்தது FAU-G.. ஆனால் இப்பொழுது விளையாட முடியாது!
இந்தியாவில் FAU-G கேம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோருக்கு வந்துள்ளது. ஆனால் ஆப்பிள் அப் ஸ்டோரில் இன்னும் வரவில்லை.
இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட FAU-G மொபைல் கேம், தற்பொழுது கூகுள் பிளே ஸ்டோரில் வந்துள்ளது. அதாவது, இந்த கேம் இன்னும் வெளியாகாத நிலையில், ரெஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனம் தரப்பில் வெளிவந்த தகவலின்படி, இந்த கேம் ஆண்ட்ராய்டில் முதலில் வரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கேம், இன்னும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் வரவில்லை.
அண்மையில், சீன செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பப்ஜி விளையாட்டு, உட்பட பல செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பப்ஜி, அதன் இந்தியன் வெர்சனை வெளியிடவுள்ளது. தற்பொழுது இந்த FAU-G கேமும் வரவுள்ளதால், இது இரண்டிற்கும் இந்தியாவில் பெரியளவில் காம்படிசன் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த FAU-G கேமை நாம் பதிவு செய்த பின், அந்த கேம் வெளியானதும் நமக்கு ஒரு நோட்டிபிகேஷன் வரும். நமது போன் அந்த கேம் விளையாடுவதற்கு ஏதுவானால், ஆட்டோமேட்டிக்காக டவுன்லோடாகி விடும். இந்த கேம் குறித்து அண்மையில் வெளிவந்த தகவலின்படி, இந்த கேம் இந்தியா மற்றும் சீனப் படைகளுக்கிடையே கால்வான் பள்ளத்தாக்கு உடன் பின்பற்றும் ஒரு லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கேமில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் FAU-G கமாண்டோஸ் என்று அழைக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, இது இந்திய ராணுவ வீரர்களை தழுவி எடுக்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.