வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த தந்தை.!வருமானமின்றி சிக்கி தவித்த 4 குழந்தைகள்.!தத்தெடுத்த சோனு சூட்.!

வருமானமின்றி சிக்கி தவித்த 4 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது அனைத்து செலவுகளையும் சோனு சூட் ஏற்றுள்ளார்.
சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் , மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.அதனுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக தன்னிடம் உதவி கேட்பவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் இவரது மனித நேயத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது 4 குழந்தைகளை தத்தெடுத்து அனைத்து செலவுகளையும் ஏற்றுள்ளார்.ஆம் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் பணியாற்றி வந்த எலக்ட்ரீஷன் ஆலம் சிங் புண்டிர் என்பவர் சிக்கி உயிரிழந்தார் . இவரின் மரணத்தால் அவரது குடும்பம் வருமானமின்றி தவித்து வந்தனர் . தினசரி வாழ்விற்கே கஷ்டப்பட்டு வந்த உயிரிழந்த ஆலம் சிங் புண்டிரின் மனைவி மற்றும் 4 குழந்தைகள் குறித்து கேள்விப்பட்ட சோனு சூட் உயிரிழந்த ஆலம் சிங் புண்டிரின் மகள்களான அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகிய 4 குழந்தைகளின் படிப்புச் செலவையும் ,அவர்களது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இது குறித்த அவரது தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது ,இனி முதல் இது என்னுடைய குடும்பம் என்று ட்வீட் செய்துள்ளார்.இவரது இந்த உதவிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
यह परिवार अब हमारा है भाई । https://t.co/PIumFwdCDJ
— sonu sood (@SonuSood) February 19, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025