கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்பட்ட மகளின் மரணம் தொடர்பாக இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பில் கேட்ஸ் மீது வழக்கு தொடர்ந்த தந்தை!!
எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது.
மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ மாணவியாக இருந்த தனது மகள் சினேகல் மருத்துவப் பணியாளர்கள் பிரிவில் இருந்ததால் அவரது கல்லூரியில் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தடுப்பூசியின் பக்கவிளைவுகள் காரணமாக அவர் கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி காலமானார்.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) இயக்குநரும் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தவறான உத்தரவாதத்தை அளித்தனர், இது மாநில அதிகாரிகளால் சரிபார்க்கப்படாமல் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்ஐஐயிடம் இருந்து அவர்கள் மீட்டெடுக்கக்கூடிய 1,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.