எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்க அப்பா – சதீஷ் மகளின் கியூட்டான கிளிக்ஸ்.!
காமெடி நடிகர் சதிஷ் தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சதீஷ். இந்த படத்தை தொடர்ந்து, மதராசபட்டினம், வாகை சூட வா, மெரினா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படம் மூலம் மிகவும் பிரபலமானார்.
தற்போது அண்ணாத்த, ப்ரெண்ட்ஷிப், ராஜா வம்சம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து தற்போது கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2020-ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது. அவ்வப்போது தனது குழந்தையுடன் விளையாடு வீடியோக்கள் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கு புகைப்படங்களை வெளியிட்டு அதில் பெங்களூரு போங்கோ.. காஷ்மீர் போங்கோ.. மும்பை போங்கோ.. எங்க போனாலும் என்னையும் கூட்டிகிட்டு போங்க அப்பா” என குறிப்பிட்டுள்ளார்.
Bangalore pongo…
Kashmir pongo…
Mumbai pongo…
Enga ponalum ennaiyum koottikittu ponga appa ???????????????? pic.twitter.com/FlXStvvx77— Sathish (@actorsathish) September 9, 2021