இந்தியாவில் தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக என்று கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870ஆம் ஆண்டு நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வர் எனும் ஊரில் பிறந்தார். இவர், பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றுத்தேர்ந்தார். பின் 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.இது போன்ற மாய வித்தை என்று மேஜிக் செய்து தனது வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் மதத்தை பரப்ப வந்த லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இதைப்பார்த்த உடன் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார். படங்கள் பெரும்பாலும் மவுனம் தான்; இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது.சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின், இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார்; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தார். பின் இவர், தனது சொத்துகள், வீட்டு சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா எனும் படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் கிடைக்க பஞ்சம் உண்டானது; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுத்தார்கள் ஆனால், இவர் ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான். இதன் பின் இந்திய சினிமா புதிய உச்சத்தை தொட்டது. இதற்க்கு அடித்தளமிட்டவர் இவரே இவர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் இந்த உலகை விட்டு மறைந்தார்.. இவரை பெருமை படுத்த மத்திய அரசு இவரது பெயரில் விருது அறிவித்து வழங்கிவருகிறது. இவ்விருதை தமிழகத்தில் இருந்து சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் பெற்றிருக்கிறார்கள். இப்படி இந்திய சினிமா வளர்ச்சியடைய காரணமான தாதாசாகெப் பால்கே மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…