கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார்.
அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம் தாய் அமண்டா ஓடி வந்தார். நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக அமண்டா ஆற்றில் குதித்தார்.
இந்த சத்தத்தை கேட்டு காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்து காப்பாற்ற முயற்சித்தார். அமண்டாவையும் ,அவரது மகனையும் காப்பாற்றினார். தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அமண்டா உயிரிழந்தார்.அவருடைய மகன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஜோஷாவா நேற்று மதியம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.இந்த தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…