தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனா பாதிப்பால் மரணம்!
மகாத்மா காந்தியின், கொள்ளு பேரன் சதிஷ் துபேலியா கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பேரனான சதீஷ் துபேலியா, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் ஆவார். மணிலால் காந்தி, காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய போது அங்கு அவர் மேற்கொண்டிருந்த பணிகளை தொடர்ந்து செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார்.
இந்நிலையில், சதீஸ் துபேலியா, கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக, அவரது சகோதரி உமா தெரிவித்துள்ளார்.
சதீஷ் தவறிய தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஊடகங்களிலும் வீடியோகிராபர் மற்றும் புகைப்படக் கலைஞனாக கழித்தார்.அனைத்து சமூகங்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் புகழ்பெற்றவர் மற்றும் பல சமூக நல அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது நண்பர்கள் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.