சியான் 60 படத்தில் விக்ரம் அவர்கள் வில்லனாகவும், துருவ் அவர்கள் மகனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. துப்பாக்கியுடன் உள்ள அதன் போஸ்ட்ர் வெளியாகி நிலையில் இது ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக அவரே அறிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விக்ரம் வில்லனாகவும், மகனான துருவ் ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் உண்மையெனில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…