இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள விக்ரமின் 60 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ள்ளார். மேலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நடிகர் விக்ரம் இந்த படத்தில் இணைந்து நடிக்க போகிறாரா அல்லது விக்ரம் இல்லாத காட்சிகள் படமாக்கப்படவுள்ளதா என்பதை குறித்த எந்த தகவலும் தெரியவில்லை, ஏனெனில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 32 நாட்கள் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…