கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம்.
சமீபத்தில் விக்ரமின் 60வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க போவதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் சில தகவல்கள் கசிந்திருந்தது. தற்போது லலித் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விக்ரம் – 60ல் அப்பாவும், மகனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் இந்த படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திரங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. துருவ் சமீபத்தில் அர்ஜூன்ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பேட்ட, இறைவி போன்ற வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த கார்த்திக் சுப்பராஜின் இந்த படமும் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை, மகனின் காம்போவில் உருவாகும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…