சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு நீதி கோரி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபலங்கள் பலர் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி சமூக வலைத்தளங்களில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஜெயம்ரவி கூறியதாவது, யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை என்றும், இந்த மனிதாபமற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை ஹன்சிகா கூறுகையில், ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் மீது சுமத்தப்பட்ட கொடூரத்தை கேட்டு பயந்தேன், இப்படி ஒரு 2 போலீசார் செய்த வெறித்தனமான செயலால் ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் நாடுக்கு அவமானம் ஏற்பட்டது. சட்டத்தின் முன் எல்லோருக்கும் ஒரே நீதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சாந்தனு கூறுகையில், போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும், சட்டம் எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தால், அதன் சக்தி என்ன என்பதை காட்டும் நேரம் இது என்று தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இதுகுறித்து கூறுகையில், சாத்தான்குளமத்தில் நடந்தது கொடூரமானது, மனிதநேயத்தை அவமதிப்பது, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள் என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த கருத்துகளுக்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…