அக்டோபரில் ரூ.3,356 கோடி வருவாயை எட்டிய ஃபாஸ்டேக் வசூல்!

Default Image

கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக் (FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது.

நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 முதல் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணத்தை வசூலிக்கின்றன.ஃபாஸ்டேக் அமலாக்கம் தேசிய நெடுஞ்சாலைகளில் காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைத்து வெளிப்படைத் தன்மையையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக்(FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது என்று பிடிஐ (PTI)செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும், குறிப்பாக பண்டிகைக் காலத்தில், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் அதிகரித்ததன் பின்னணியில்,இந்த வசூல் அதிகரித்துள்ளது.

மேலும்,ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் மூலம் சுங்கச்சாவடி வசூல், சனிக்கிழமையன்று இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.122.81 கோடியை பதிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் ஃபாஸ்டேக் மூலம் டோல் வசூல் ரூ.193.6 மில்லியன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.3,000 கோடியை பதிவு செய்துள்ளதாகவும்,ஆகஸ்டில், 201.2 மில்லியன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.3,076.56 கோடியை பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

தற்போது, ​இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 722 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 196 சுங்கச் சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கின்றன. வசூலிக்கப்படும் மொத்த சுங்க கட்டணத்தில் கிட்டத்தட்ட 82 சதவீதம் வர்த்தக வாகனங்கள் கனரக வாகனங்களில் இருந்து வருகிறது. மொத்த கட்டண வசூலில் கார்கள் 18 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்த பிறகு, சுங்கச்சாவடிகளில் இருந்து வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஃபாஸ்டேக் இயக்கப்பட்ட வாகனங்கள் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களுடன் வருகின்றன. ஸ்டிக்கர் பயனரின் வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் வாலட்டுடன் இணைக்கப்பட்ட சிப்பைக் கொண்டுள்ளது. வாகனம் ஒரு டோல் பிளாசா வழியாக செல்லும் போதெல்லாம், அந்த இடத்தில் உள்ள அமைப்பு ரேடியோ சிக்னல்கள் மூலம் சிப்பைக் கண்டறிந்து, தேவையான கட்டணத் தொகையை பயனரின் வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் வாலட்டில் இருந்து நேரடியாகப் டெபிட் செய்கிறது.

பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் இந்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக ஃபாஸ்டேக் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்