வேகமாக பரவும் புதர்த்தீ., பொதுமக்கள் தீவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்.!

Default Image

ஆஸ்திரேலியாவின் ஃப்ரேசர் தீவில் புதர்த்தீ வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் தீவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய-பட்டியலிடப்பட்ட ஃப்ரேசர் தீவில் சுற்றுலா பயணிகள் குளிர் காய்வதற்காக மூட்டிய நெருப்பு புதிர் தீயாக மாறியது. 7 வாரங்களாக கட்டுக்கடங்காமல் எரியும் தீயால், அந்த தீவில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட காடுகள் கருகி சாம்பலாகின.

நேற்று பிற்பகல் இந்த தீ விபத்து தீவிரமடைந்துள்ளது. இதனால்  ஃப்ரேசர் தீவில் 90க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 38 வாகனங்கள் மற்றும் 17 விமானங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் குயின்ஸ்லாந்து முழுவதும் வெப்பநிலை உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. தற்போது வரை 48 தீ விபத்துக்களுக்கு அவசர சேவைகள் வந்துள்ளன. ஆஸ்திரேலியா வெப்பமான மற்றும் நீண்ட கோடைகாலத்தை அனுபவித்து வருகிறது.

கடந்த பருவத்தில் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் பிளாக் சம்மர் என்று அழைக்கப்பட்டார். வழக்கத்திற்கு மாறாக நீடித்த புதர் தீ காரணமாக கிட்டத்தட்ட 12 மில்லியன் ஹெக்டேர் (30 மில்லியன் ஏக்கர்) எரிந்து 33 பேர் மற்றும் 1 பில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்