ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.1,184 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் திரைப்பட தொடரில் பிரபலமான வாகன ரேஸ் மற்றும் அதிரடி திரைப்படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ். இதுவரை 8 பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9வது பாகத்தை இயக்குனர் ஜஸ்டின் லின் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்குனர் ஜஸ்டின் லின் இயக்கினார். இந்த படத்தில் மிச்சல் ரோட்ரிகெஸ்,டீசல், ஜான் சீனா, டைரீஸ் கிப்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அடுத்த ஆண்டு அதாவது (2021) ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் இப்படம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் சீனா, ஹாங்காங், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மட்டும் கடந்த மே 19 ஆம் தேதி வெளியானது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வெளியான 5 நாட்களில் முழுவதுமாக ரூ.1,184 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…