டெல்லியில் விவசாயிகளின் போராட்டம்! அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி!

Published by
லீனா

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், சினிமா பிரபலமான நடிகர் கார்த்திக் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள் பெருந்திரளாக கடும் பனிப்பொழிவு, கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல், உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன், தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில், பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.

நாளும் பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில், தங்கள் மாடுகளை மற்றும் பயிர்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு குடும்பத்தாரை பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலை தூரம் பயணித்து வந்து போராடி வரும் செய்திகள் நாம் ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்குகிறது.

தண்ணீர் பற்றாக்குறை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைபொருள்களுக்கு உரிய விலை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களால், தமிழ் இன்னும் மிக மோசமாக பாதிப்படையும் என கருதுகிறார்கள். தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும் தங்கள் விளை பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெருமுதலாளிகள் கைகளுக்கு, இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்த சட்டங்களை விலகிக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ஆகவே போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து, அவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு. அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் என நடிகர் கார்த்திக் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

19 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

42 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

46 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

1 hour ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

1 hour ago

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…

2 hours ago