டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் தான் இந்தியாவின் உணவு படை வீரர்கள் என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 12-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் டெல்லியில் விவசாயிகள், மத்திய அரசு இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சட்டங்களை வாபஸ் பெற கோரி வருகின்ற 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அதில் நம் விவசாயிகள் தான் இந்தியாவின் உணவு படை வீரர்கள் . அவர்களின் அச்சங்களையும், பிரச்சினைகளையும் அரசு தீர்த்து நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்.வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில் இந்த நெருக்கடிகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் .
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…