பிரபல நடிகைக்கு ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்! இப்படியா பண்றது அதுக்கு!

நடிகை நூரின் ஷெரீப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஒரு அடர் லவ் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் இவர் நடிகை பிரியா வாரியருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் அண்மையில் கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியில் நடந்த தனியார் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து, ரசிகர் ஒருவரின் கைப்பட்டு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு ஷெரீப் தாமதகா வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை பட்டு நடிகையின் மூக்கு உடைந்து ரத்தம் வந்ததால் வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நடிகை நூரின் கதறி அழுதுள்ளார்.