தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய ஹேஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளி அஜித் ரசிகர்களால் உருவாகியுள்ள ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் போஸ்ட்ர்களை டிரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
அந்த வகையில் தளபதி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறிய #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக் 6.5மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களின் #HBDTHALAPATHYVijay பின்னுக்குத் தள்ளி தல அஜித் ரசிகர்கள் #NonpareilThalaAJITH மற்றும் #Valimai என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது .அது மட்டுமின்றி பிக்பாஸ் பிரபலமான கவினும் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட #HBDKavin என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இடம்பெற்று சாதனை செய்து வருகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…