தளபதியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து டுவிட்டரில் தெறிக்கவிடும் தல ரசிகர்கள்.!

Default Image

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய ஹேஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளி அஜித் ரசிகர்களால் உருவாகியுள்ள ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது.

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் போஸ்ட்ர்களை டிரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

அந்த வகையில் தளபதி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறிய #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக் 6.5மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களின் #HBDTHALAPATHYVijay பின்னுக்குத் தள்ளி தல அஜித் ரசிகர்கள் #NonpareilThalaAJITH  மற்றும் #Valimai என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது .அது மட்டுமின்றி பிக்பாஸ் பிரபலமான கவினும் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட #HBDKavin என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இடம்பெற்று சாதனை செய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்