ரஜினி கெட்டப்பிலே சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூற வந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரஜினி கெட்டப்பிலே வாழ்த்து கூற வந்துள்ளனர் .
தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்கள் ரஜினி நடித்த பல படங்களில் உள்ள கெட்டப்பிலே சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் வீட்டின் வாழ்த்து கூற குவிந்துள்ளனர்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ரஜினி கெட்டப்பிலே சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூற வந்த ரசிகர்கள்.!#RajinikanthBirthday | #HBDSuperstarRajinikanth | #Superstar pic.twitter.com/gPFspXqGVq
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 12, 2020