பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை.!? சோகத்தில் ரசிகர்கள்..!

Default Image

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரே வாரம் உள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் “பீஸ்ட்” திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு குவைத் நாட்டில் தடை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நாட்டு விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்