பிக் பாஸ் 5 குறித்து மாஸ் அப்டேட்.! கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் 5வது சீசன் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் . அதன் பின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு முடிந்தது, அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து 5- வது சீசன் எப்போது தான் தொடங்கும் என்று ரசிகர்கள் காத்துள்ள நிலையில், அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதாவது பிக் பாஸ் 5- வது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பிக்பாஸ் வீட்டின் வேலைகள் நடக்கின்றன. அதேபோல் பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோவை இந்த வாரத்தில் எடுக்க இருக்கிறார்களாம். 5வது சீசனின் ப்ரோமோ வீடியோ ஆகஸ்ட் 27- ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.