சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலை மேடம் துசாட்ஸில் வைக்கப்பட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை!
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலைமேடம் துசாட்ஸில் வைக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் தனக்கென பல கோடி ரசிகர்களை கொண்டவர். அவரது மறைவால் அவரைப் பிரிந்து வாழக்கூடிய ரசிகர்கள் பலர் அவரது மெழுகுச் சிலையை பிரபல மெழுகு அருங்காட்சியகமாகிய லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸில் நிறுவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவரது ரசிகராகிய வசுந்தரா தாஸ் என்பவர் ஆன்லைன் வலைதளத்தில் change.org எனும் இணையதள மனு ஒன்றை தொடக்கி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலை அவர்களுக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என விரும்புபவர்களின் கையெழுத்தை கேட்டுள்ளார். அவரது அழைப்புக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் இதுவரை குவிந்துள்ளது. இதனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களின் மெழுகு சிலை மேடம் துசாட்ஸில் நிறுவப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.