மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்.! சோகத்தில் ரசிகர்கள்.!!
இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் பெற்றுள்ளதாகவும், படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைத் துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.