நடிகர் அஜித்தின் 61 – வது படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61- வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும், படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தல 61 படத்தில் நடிக்க பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பிரகாஷ்ராஜ் மற்றும் ஹிந்தி நடிகை தபு ஆகியோர் நடிக்க போவதாக பரவி வந்த தகவலை தொடர்ந்து, இந்த படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…