சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…