தளபதி பட நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரசிகர்! நடிகையின் அதிரடியான செயல்!
நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து எதிர் நீச்சல், புலி, அஞ்சலை, உள்குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தேவி 2 திரைப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இணையப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்ற ரசிகர் நந்திதாவுக்கு ஆபாச செய்திகளை இன்பாக்ஸ்க்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகை நந்திதா அந்த பதிவில், ‘இது போன்ற நபர்களை என்ன செய்வது, இவர்களுக்கு குடும்பம் இல்லையா?’ என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.