கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்துடன் செல்ஃபி, வீடியோ எடுத்த ரசிகை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தன் மனைவி ஷாலினியுடன் வந்தார் அப்பொழுது அங்குள்ள மருத்துவமனையில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த பார்சானா அஜித்துடன் செல்ஃபி எடுத்தார். அப்போது அதனை பார்த்த மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரிகள் பார்சானாவிடம் இருந்து அவரது தொலைபேசியை பறித்துக் கொண்டு நிர்வாகத்தின் தனியுரிமை கொள்கை அடிப்படையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் புகைப்படம் எடுப்பது மற்றும் அதை சமூக வலைதளங்களில் வெளியீடுவது தவறு என்று கூறி தொலைபேசியை கொடுத்துள்ளனர்.
ஆனால் அவர் எடுத்த அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனை பார்த்த சிலர் நடிகர் அஜித்திற்கு கொரோனோவா என்று வதந்தி செய்தியை பரப்பி வந்தனர். இதனால் பார்சானாவை மருத்துவமனையில் இருந்து பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பார்சானாவுக்கு வேலை கிடைக்கச் செய்தார். அதற்கு பிறகு சிறியது நாட்களிலே மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார். லோன் காரணங்களை காட்டி பார்சானாவின் படிப்பு சான்றிதழையும் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாக பணிக்கு செல்லமுடியாமல், தனது வயதான தாய், தந்தையை கவனிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் நடந்த தகவலை அஜித்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை பார்சானா தொடர்பு கொண்டுள்ளார்.
சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியவுடன் முதலில் சுரேஷ் சந்திரா அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக கூறியதாகவும், அதற்கு பிறகு முடியாது என்றும் மருத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பார்சானா சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார். இதனை தொடர்ந்து பார்சானா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா மீது ஏமாற்றுதல் ,நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளார். பார்சானா அளித்த புகாரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…