பிரபல டிவி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்…!
பிரபல டிவி தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் நேற்றிரவு காலமானார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி,அதன்பின்னர் மிகவும் பிரபலமாகிய ஆனந்த கண்ணன்,சிந்துபாத் தொடரிலும் ஹீரோவாக நடித்தார்.இதனால்,அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.
இதனையடுத்து,அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,ஆனந்த் கண்ணன் புற்றுநோய் காரணமாக நேற்று இரவு காலமானார்.அவரது மறைவு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஆனந்த கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
A great friend a great human is no more!! #RIPanandakannan my deepest condolences pic.twitter.com/6MtEQGcF8q
— venkat prabhu (@vp_offl) August 16, 2021