புகழ் பெற்ற தமிழ் திரைப்பட ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று!

Published by
Rebekal

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

ஜூன் 24ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு பிறந்தவர்தன் முத்தையா என அழைக்கப்படும் கவியரசு கண்ணதாசன். இவருக்கு ஆறு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயதிலேயே எழுத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு சிறு புத்தகங்களை வாசித்து பத்திரிக்கை எழுத வேண்டுமென ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். இவரது இந்த ஆர்வம் காரணமாக இவர் தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக உருவெடுத்தார்.

இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும் இவர் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். மேலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்தவர். சேரமான் காதலி படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்ற இவருக்கு மேலும் கம்பர் மற்றும் பாரதியாரின் பாடல்களில் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளது.

இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டு இருந்த நிலையில், இவரது இவர் 1981-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் இவரது நினைவாக தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும் கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் கூடிய நூலகம் உள்ளது. மேலும், அந்த அரங்கில் கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

7 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

40 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago