ஊரடங்கால் தற்கொலை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகர்.!

Default Image

மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டதன் காரணமாக திரைப்படத்துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிக்கப் பட்டுள்ளது.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகரான மன்மித் கிரோவால் வறுமை காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார் .

மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் . மும்பையில் உள்ள கார்கில் நகரில் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக வேலைவாய்ப்பிலாமல் இருந்த நிலையில் ஊரடங்கில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார்.இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய அதனை கண்ட மனைவி கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொரோனா காரணமாக வர மறுத்துள்ளனர்.அதனையடுத்து வாட்ச்மேன் உதவியால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழியிலே உயிரிழந்துள்ளார். விசாரணையில் 32 வயதான இவர் வாடகை  பணம் கொடுக்க இயலாமையாலும் ,கடன் பிரச்சினை காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்