வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்.!

Default Image

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர்.ஸ்டுடியோஸ் 5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் வீர மரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். வீரமரணமடைந்த பழனியின் உடல் இன்று மாலை ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைவதாக கூறப்படுகிறது.பல பிரபலங்கள் பழனியின் வீரமரணத்திற்கு சலாட் செய்து தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் விரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு 5லட்சம் நிதி வழங்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,பனி ,வெப்பம் ,தாகம்,குளிர் ,பட்டினி மற்றும் தங்கள் குடும்பங்களை கூட பிரிந்து போராடிய வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறோம் . அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.தமிழ் வீரரான பழனியின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.எந்தவொரு பணமும் ஒரு போர்வீரனின் மரணத்திற்கு சமமாக இருக்காது. ஆனால் எங்களால் முடிந்த சிறிய விஷயத்தை செய்கிறோம். பழனியின் குடும்பத்தினருக்கு அவரது வலிமையான தியாகத்திற்காக 5 லட்சம் பணம் உதவி செய்கிறோம் என்றும் ,அவரது ஆத்மா‌ சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்