கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர்….!

கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் முத்துக்குமரன் உயிரிழப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொற்று பாதிப்பால் கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில், இந்நிலையில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி நடித்த திரைப்படம் யாக்கை. இந்த படத்தை தயாரித்தவர் முத்துக்குமரன். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் முத்துக்குமரன் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் மறைவு குறித்து நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தமான பதிவினைப் பதிவிட்டுள்ளார்.
Today I lost my close friend and the producer of my film Yakkai. He was family to me. The kindest man I have ever met n wld never say “NO” to anything or anyone. Always wanted to see people happy. We will miss u. My deepest condolences to his family. Gone too soon.#RIPMUTHU pic.twitter.com/tAGHSpR5ZZ
— krishna (@Actor_Krishna) May 1, 2021