பிரபலமான பிண்ணனி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 49.
பாடகர் பம்பா பாக்யா இசையமைப்பாளர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வெளியான “ராவணன்” படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து எந்திரன் 2.0 படத்தில் “புள்ளினங்காள்” , “சர்கார்” படத்தில் இடம்பெற்றிருந்த “சிம்ட்டாங்காரன்”, “பிகில்” படத்தில் இடம்பெற்றிருந்த “காலமே”, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
அதைப்போல, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்த “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடலையும், பம்பா பாக்யா தான் பாடியிருந்தார். மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து வெளியான ‘பொன்னி நதி’ பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பம்பா பாக்யா பாடியுள்ளார்.
இந்த நிலையில், 49 வயதான பம்பா பாக்யா மரடைப்பால் இன்று காலமானார். இவரது திடீர் மறைவுக்கு திரையுலக சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…