மணிரத்னத்தின் 9எபிசோட் வெப்சீரிஸில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.?

மணிரத்னம் தயாரிக்கும் 9 எபிசோட் வெப் சீரிஸில் மலையாள நடிகரான ஃபஹத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் அவர்கள் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 9எபிசோடுகளை கொண்ட அந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடையும ஒவ்வோரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன் உட்பட பல தெலுங்கு திரையுலகினை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர் சித்தார்த், அரவிந்த் சாமி ஆகியோரும் இந்த தொடரின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்கள்.
சமீபத்தில் சூர்யா அதில் ஒரு எபிசோடில் நடிப்பதாகவும்,’நவரசா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸை ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும் இந்த வெப் சீரிஸில் விஜய் சேதுபதி, ஜி. வி. பிரகாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது இந்த வெப் சீரிஸில் பிரபல மலையாள நடிகரான ஃபஹத் பாசில் ஒரு எபிசோடில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025