மலையாள நடிகர் ND பிரசாத் தனது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் (வயது 43), ஜூன் 25 அன்று கொச்சினுக்கு அருகிலுள்ள களமசேரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இதனையடுத்து, தந்தையின் உடலைக் கண்ட அவரது குழந்தைகள் அக்கம் பக்கத்தினருக்கும்,போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நடிகர் பிரசாத்தின் குடும்பப் பிரச்சனைகள் அவரை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளியதாக கூறப்படும் நிலையில், “அவர் சில நாட்களாக தனிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.அவரது மனைவியும் சில மாதங்களாக அவரை விட்டு விலகி இருந்துள்ளார்.அவர் இறப்பதற்கு முன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
அதே சமயம்,நடிகர் பிரசாத் போதைப்பொருள் உட்கொண்டதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டார்.அதன்படி,2021 ஆம் ஆண்டில்,போதை மருந்துகளை (2.5 கிராம் ஹாஷிஷ் எண்ணெய் மற்றும் 15 கிராம் கஞ்சா) வைத்திருந்ததற்காக கலால் துறை பிரசாத்தை கைது செய்தது.மேலும், அவரிடமிருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த நிலையில்,அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,என்.டி.பிரசாத்தின் சடலம் ஜூன் 26 அன்று மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
என்.டி.பிரசாத் இபா,கர்மணி உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும்,நடிகர் நிவின் பாலி முக்கிய வேடத்தில் நடித்த ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூவில்’ வில்லனாக நடித்ததன் மூலம் என்டி பிரசாத் மிகவும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…