தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தை எஸ்ஜே சூர்யா இய்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தை எஸ்ஜே சூர்யா இய்க்கவுள்ளதாகவும் ,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தளபதியிடம் எஸ்ஜே சூர்யா கூறிய கதை பிடித்ததாகவும் ,எனவே தளபதி-65 படத்தை எஸ்ஜே சூர்யா இய்க்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஏப்ரல் வரை டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் நெல்சன் பிஸியாக இருக்கும் காரணத்தால் தான் தளபதி-65 படத்தை எஸ்ஜே சூர்யா இய்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்ஜே சூர்யா மற்றும் விஜய் கூட்டணியில் ஏற்கனவே குஷி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…