பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்..!சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும்,இயக்குனர் வெட்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார்.
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவரும்,இசைஞானி இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரனின் மனைவி மற்றும் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு,நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை(வயது 69),உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து,தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று இரவு 11.30 மணியளவில் மணிமேகலை காலமானார்.
இதனையடுத்து,கங்கை அமரனின் மனைவியின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும், இறுதி சடங்குகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025