தல 61 படத்தினை ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 61 திரைப்படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே தல அஜித்தின் 61-வது படத்தை சுதா கொங்கரா, விஷ்ணு வர்தன் ஆகியோர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக தல 61 படத்தினை எச்.வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தல அஜித்தை வைத்து கிரீடம் எனும் படத்தினை இயக்கியதும்,அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தல அஜித் விஜய் அவர்களை சந்தித்து உள்ளதாகவும், நீண்ட நேரம் பேசியதாகவும் வெளியான தகவலை தொடர்ந்து தல 61 படத்தினை ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…