இந்தி திணிப்புக்கு எதிராக I am a தமிழ் பேசும் Indian, இந்தி தெரியாது போடா’ வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை அணிந்த புகைப்படங்களை நடிகர் கருணாகரன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், இந்தி திணிப்பு போராட்டங்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம் இந்தியராக இருந்து விட்டு இந்தி தெரியாத என்ற கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்தி தெரியாத மருத்துவர்களை ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் வெளியேற சொன்னதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட ‘I am a தமிழ் பேசும் Indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ ஆகிய வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை யுவன் ஷங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பலர் அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. இந்த நிலையில் தற்போது இந்தி திணிப்பை எதிர்த்து நகைச்சுவை நடிகரான கருணாகரன் மற்றும் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அவரது மகன் ஆகியோர் ‘Iam a தமிழ் பேசும் Indian’ என்ற வாசகத்துடன் கூடிய டீசர்ட்களை அணிந்துள்ளனர். எம்பி கனிமொழி அவர்களுக்கு நடந்ததை போன்று வெற்றிமாறன் அவர்களுக்கும் டெல்லி விமான நிலையத்தில் நடந்ததாக சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களது இந்த டீசர்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…