லட்சதீவில் சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. லட்சத்தீவு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இதன் நிர்வாகத் தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான நிர்வாகம் ஒரு விதத்தில் மக்களுக்கு எதிரான பல்வேறு சட்ட திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடை, மதுபானத்திற்கான தடை நீக்கம், குண்டர் சட்டத்தை அமல்படுத்துதல் போன்ற மக்களுக்கு விரோதமான சட்டங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து லட்சத்தீவு சேர்ந்த மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில், லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த, பிரபல இயக்குனரும் நடிகையுமான சுல்தானா கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விவாதத்தில், மத்திய அரசு கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, லட்சதீவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக, பா.ஜ.க.வின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் கவரட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்பு பேச்சு) பிரிவுகளின் கீழ் சுல்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாஜக-வினர் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…