பிரபல நகைச்சுவை நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலம்…!
தமிழில் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரீட்சயமாகிய நடிகர் தான் லிட்டில் ஜான். வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது.
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லிட்டில் ஜான் காலை வெகு நேரமாகியும் எழுந்து இருக்கத்தால் சந்தேகமடைந்த நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது லிட்டில் ஜான் உயிரிழந்த நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு இருந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அல்லி நாயக்கன் பாளையத்தில் நடைபெற்றுள்ளது.