பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை மீறி பல்வேறு கேளிக்கை கொண்டாட்டங்களில் பங்கேற்றதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் சந்தித்தவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மும்பை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025