சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.?

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிகர் பிரபல நாடிகரான அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தையும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், படத்தை அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இந்த இந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது இதில் பிரபல நாடிகரான அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025