வலிமை படத்தில் அஜித்துக்கு அம்மாவாக பிரபல நடிகை சுமித்ரா நடித்துள்ளதாகவும்,தல அஜித் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குனர்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .மேலும் அஜித் அவர்கள் ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா விலாலனாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது .
சென்னையின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அதில் அஜித் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.இதுவரை வலிமை படத்தின் அப்டேட் எதுவும் வெளி வராததால் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளனர் .இந்த நிலையில் தற்போது வலிமை படத்திலிருந்து புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது வலிமை படத்தில் தல அஜித்திற்கு அம்மாவாக நடிப்பது பிரபல நடிகையான சுமித்ரா என்று கூறப்படுகிறது .
தற்போது நடிகை சுமித்ரா வலிமை படம் குறித்து கூறியதாவது ,தல அஜித் வலிமை படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளதாகவும் ,அதாவது அஜித் அவர்கள் இளமை தோற்றத்திலும் ,வயதான தோற்றத்திலும் நடித்துள்ளதாக கூறியுள்ளார் .இந்த தகவல் உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும் . தற்போது தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…