மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம் விதித்த காவல்துறையினர்.
கொரோனா ஊரடங்கு தற்பொழுது ஓரளவு தளர்வில் இருந்தாலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அரசு கட்டாயமான உத்தரவாக கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது தளர்வு அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பிக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனவே அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றுகிறார்களா? முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரைப்படத்தில் அருவி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை அதிதி பாலாஜி தனது காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற போது மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 200 அபராதம் விதித்துள்ளனர். அவர் அந்த அபராதத்தையும் செலுத்தி விட்டு பின் முன் கவசம் அணிந்து சென்று உள்ளார். ஆனால் காரில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா என தற்பொழுது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…