ராம் சரணின் 15 வதுபடத்தில் நடிகை கியாரா அத்வானி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகை கியாரா அத்வானி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடிகை கியாரா அத்வானி தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…